Sunday, May 29, 2011

நான் ஏன் நாத்திகனானேன்?




எனக்கு ஓரளவு விவரம் தெரிந்த வயதில் ஒரு விசித்திரமான கேள்வி
என்னுள் எப்பொழுதும் எழுவதுண்டு. அது "நான்" என்னும் இந்த உணர்வு இதற்கு முன்னால் இருந்ததா?அல்லது இந்த உடலுடன் ஏற்பட்டதா? இதற்கு முன்னால்நான் என்னவாக இருந்தேன்? ஒரு நினையும் இல்லையே!

நான் என்பது நிரந்தரமா? அழிவுடையாதா? விடை ஒன்றும் கிடைக்கவில்லை. அதற்காக எந்தமுயற்சியும் செய்யவில்லை.ஆனாலும் இந்த கேள்வி என் ஆழ்மனதில் எப்போதும் உண்டு.

என் பெற்றோரும் எந்தவித வைதிக,சம்பிரதாயமுறைகளையும் வைத்துக் கொள்ளவில்லை.அன்றாட வாழ்க்கை மிகுந்த சிரமத்திற் சென்று கொண்டிருந்ததால் பண்டிகை காலத்தில் தான் பூஜை, புனஸ்காரமெல்லாம்... திருவிழா,காதுகுத்து,திருமணங்களில் கோயில் பக்கம் செல்வதுண்டு.மேலும் வறுமையில் பொழுது போக்கிற்காக அழைத்து செல்லும் ஒரே இடம் கோயிலில் கல்யானை இருக்கும் இடமாகத்தான் இருக்கும்.

தேர்வு காலங்களிலும்,கஷ்ட காலங்களிலும் இறைவனிடம் பிரார்த்திப்பது உண்டு. அம்மா,அப்பா சண்டையிடும்போது அதிகமாக இறைவனிடம் வேண்டுவதுண்டு.இவ்வளவே இறைவனுக்கும் எனக்கும் அன்றைய நிலையில் இருந்த தொடர்பு.

நேர்மையாக வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்கையில் வளங்களை சேர்த்துக்கொள்ளவில்லை.அதே வகுப்பில் வகுப்பு நேரத்திற்கு பிறகு வீட்டில் படம் எடுத்து பரீட்சை பேப்பரை முதல்நாளே கொடுக்கும் ஆசிரியர்கள் தங்களை வளமிக்கவர் களாகவும், பலமிக்கவர்கலாகவும் ஆக்கிக் கொண்டனர்.

கடவுளிடம் பக்தியின் பெயரால் திளைத்த சமூகத்தினர் மீண்டும் அதே சமுகத்தால் பழி வாங்கப்படுவதையும் கண்டேன். வெறும் தயிர்சாதமும், சாம்பாரும் உண்டுவிட்டு அப்பாவியாய் நல்ல மதிப்பெண் பெற்ற என் வகுப்புத்தோழர்கள் நல்ல வேலையில்லாமல் மீண்டும் தட்டெடுத்து மணியாட்டுவதை கண்டிருக்கிறேன். சமூகத்தின் விதிமுறைகள் என்னை குழப்பமடைய செய்ததது!


தெருவுக்கு ஒரு ரௌடி இருந்த நேரமது. அவர்களுக்கு தான் கட்சியில் செல்வாக்கு. அவர்கள் வைத்தது தான் சட்டம்.சமுகத்தில் நான் கண்ட ஊழல்களும், சமுக அவலங்களும் என்னை இறைவன்பால் கொண்ட நம்பிக்கையை இழக்கச் செய்தது.பலவிதமான அக்கிரமங்கள் நடந்தும் இந்த புராணகால கடவுள் வரவில்லையே ஏன்? என்ற கேள்வியும்,பெரும்பான்யோர் மத்தியில் "கடவுள் நம்பிக்கை"  கேலிக்குரியதாக பார்க்கப்பட்டதையும் உணர்ந்தேன்.

மேலும் நம் புராணங்களும்,இதிகாசங்களும் நம்வர்களால் கேலிக்குரியதாகவே தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது.ஒரு கடவுளுக்கு இருமனைவியர். அவர்களின்பலமும், பலவீனங்களும், ஒரு மதத்தினர் மற்றவர் மத கடவுளை ஏற்றுக் கொள்ளாததும், மேலும் ஏளனம் செய்தலும்,
இறைவனும்,மதகோட்பாடுகளும் காலம், இடம், எல்லைகேற்ற வாறு வெவ்வேறு நியதி உடையவையாக இருந்தது. பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது, மன்னிக்கப்படுவது, சொர்க்கம்,நரகம் இவை அனைத்தும் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது.

நான் ஏன் தவறு செய்து விட்டு கடவுளிடம் கையேந்த வேண்டும்? நான் செய்யும் தவறுகளுக்கும்,நன்மைக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்ள துணிந்து விட்டேன்.

கடவுளிடம் நம்பிக்கை இழந்து பகுத்தறிவாதி!? ஆனேன்..உண்மையின் பக்கம் எப்படி நான் சென்றேன் என்பது இனிவரும்....